27.4 C
Jaffna
April 9, 2025
Pagetamil
இலங்கை

பொலிஸ் வாகனத்துடன் விபத்து: மன்னாரில் இளைஞன் பலி!

மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இன்று வியாழக்கிழமை(29) காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மன்னார் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான ஆனந்த் கன்பியூசியஸ் விஜய் (32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மன்னாரில் இருந்து பேசாலை நோக்கி பயணித்த பொலிஸ் டிபென்டர் ரக வாகனமும், பேசாலை வீதியூடாக மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிலும் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வீதியில் தூக்கி வீசப்பட்ட நிலையில்,படுகாயமடைந்த நிலையில்,வீதியால் சென்றவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

.குறித்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

புதிய ஊழல் தடுப்பு சட்டத்தில் கைதான முதல் ஆள் நான் தான்!

Pagetamil

பிணை நிபந்தனையை பூர்த்தி செய்யாததால் வியாழேந்திரன் மீண்டும் சிறையில்

Pagetamil

தேசபந்து தென்னக்கோன் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுவுக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்!

Pagetamil

இந்தியாவின் தருமபுரம் ஆதீனம் யாழ் வருகை!

Pagetamil

பேய் விரட்ட சடங்கு செய்ய சென்ற மந்திரவாதி ரூ.38 இலட்சம் பெறுமதியான நகைகளுடன் மாயம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!