கொழும்பு மற்றும் கம்பஹாவில் 22 இடங்களில் இன்று முட்டைகள் தலா ரூ.55க்கு விற்கப்படும்.
முட்டை விலையில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான அதிகரிப்பு காரணமாக முட்டையை குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் பல முட்டை உற்பத்தியாளர் சங்கங்களுக்கு இடையில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு முட்டையை ரூ.55க்கு விற்க சங்கங்கள் ஒப்புக்கொண்டன.
இதனால் முட்டை உற்பத்தியாளர்கள் 20 லொறிகளை கொழும்பைச் சுற்றியுள்ள பல இடங்களிலும் கம்பஹாவிலும் முட்டைகளை விற்பனை செய்ய அனுப்ப நடவடிக்கை எடுத்தனர்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையம், தெமட்டகொட, கொம்பனித்தீவு, தெஹிவளை, பத்தரமுல்ல, நுகேகொட, மஹரகம, மீகொட மற்றும் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையங்கள், அரச ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை அண்டிய சந்தி மற்றும் ஹோமாகம போன்ற நகர்ப்புறங்களில் லொறிகள் நிறுத்தப்படும்.
வத்தளை, ஜா-எல, ராகம, நீர்கொழும்பு, கிரிபத்கொட, கடவத்தை மற்றும் பேலியகொட ஆகிய இடங்களில் உள்ள லொறிகளில் இருந்தும் இதே பாணியில் முட்டைகள் விற்பனை செய்யப்படும்.