ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாஃப்டரின் மர்ம மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர், நேற்று தினேஷ் ஷாஃப்டரின் மனைவியின் தாயாரிடம் முழுமையாக விசாரித்ததன் பின்னர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று நான்காவது முறையாக தினேஷ் ஷாஃப்டரின் மனைவியிடமும் விசாரணை நடத்தியது.
ஷாஃப்டரின் மனைவியின் தாயிடம் குறுஞ்செய்தி மற்றும் அவர் இறப்பதற்கு முன்னர் பாதிக்கப்பட்டவரிடமிருந்து பெற்றதாகக் கூறப்படும் ஆவணம் மற்றும் பல விஷயங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சிஐடி விசாரணை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்பதைக் கண்டறியவும், வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பல விவரங்களை அறிந்து கொள்ளவும் அதிகாரிகள் மனைவியிடம் மேலும் விசாரணை நடத்தியதாக சிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.