இலங்கையை விட்டு விலகிச் செல்லும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

Date:

நாட்டின் மேற்குப் பகுதியூடாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் படிப்படியாக இலங்கைக் கடற்கரையிலிருந்து நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பு நாட்டை விட்டு நகர்வதால், வானிலையில் அதன் தாக்கம் இன்று மாலை முதல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வானிலை முன்னறிவிப்பின்படி, நாளை செவ்வாய்க்கிழமை (27) வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும்.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாணத்தில் 190 மில்லியன் ரூபா செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!

யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவை 190 மில்லியன்...

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்ய கோரி மீனவர்கள் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்யுமாறும் சுருக்கு வலைக்கு  உடந்தையாக...

119 குடும்பத்தினருக்குக் காணாமல் போனோர் அலுவலகத்தில் அழைப்பு: இதுவரை 11,000 பேரிடம் விசாரணை

காணாமல் போனவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 119 குடும்பத்தினர் காணாமல் போன ஆட்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்