10 பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நிதி அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, சுற்றுலாத் துறைக்கான ஆற்றல் பானங்கள், தளபாடங்கள் உற்பத்திக்குத் தேவையான MDF பலகைகள், CCTV அலகுகள் மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்கான உபகரணங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் விளையாட்டு அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இலங்கை கையாண்டு வரும் அந்நிய செலாவணி நெருக்கடியை கருத்தில் கொண்டு இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் பல சந்தர்ப்பங்களில் வர்த்தமானி வெளியிடப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1