கொழும்பில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 50 வயதுடைய தனியார் வங்கி முகாமையாளரை டிசம்பர் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் டி.என்.ஏ.இளங்கசிங்க நேற்று உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிருலப்பனை பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கண்ணாடியில் கருப்பு ஸ்ரிக்கர் ஒட்டிய ஜீப்பில் சிறுமியை ழைத்துச் சென்று, பொது வாகன நிறுத்துமிடத்தில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், வைத்தியசாலை இதுவரை மருத்துவ அறிக்கைகளை வெளியிடவில்லை எனவும் பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மனைவி உயிரிழந்துள்ளதாகவும், அவர் இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேகநபர் மூன்று மாதங்களுக்கும் மேலாக சிறுமியுடன் தொடர்பில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.




