அவுஸ்திரேலியாவின் மெல்போர்னின் தென்கிழக்கில் உள்ள சான்டர்ஸ்ட் என்ற இடத்தில் தனது முன்னாள் மனைவியை குத்திக் கொன்றதுடன், கொலை முயற்சியில் மகனையும் படுகாயப்படுத்திய இலங்கை நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
3 பிள்ளைகளின் தாயான 44 வயது பெண்ணே கொல்லப்பட்டார்.
தம்பதியரின் சிறிய மகள் உதவி கோரி அயலவர்களின் வீட்டுக் கதவை தட்டுவதும், உதவி கோரி கெஞ்சுவதும் சிசிரிவி காணொளியில் பதிவாகியுள்ளது.
அயலவர்களிடம் தாக்குதல் பற்றிய விபரங்களை தெரிவிப்பதற்கு முன்னர் “பிளீஸ்.. பிளீஸ்,” என்று கூறுகிறார்.
“அவர் (அம்மா) இறந்துவிட்டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என்றும் கூறுகிறார்.
“நாங்கள் வருகிறோம், வருகிறோம், வருகிறோம்” என்று பக்கத்து வீட்டுக்காரர் கத்துவது கேட்கிறது.
ஆனால் அயலவர்கள் போவதற்கு முன்னதாக, சிறுமியின் தாயார் நெலோமி பெரேரா கொல்லப்பட்டார்.
நெலோமி பெரேராவை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் 45 வயதான தினுஷ் குரேரா ஆவார். அண்மையில்தான் அவர்கள் பிரிந்துள்ளனர். இவர்கள் இலங்கை பின்னணியுடையவர்கள்.
“என் அம்மா இறந்துவிட்டார், என் அம்மா இறந்துவிட்டார்” என்று உதவிகோரி வந்த சொல்லிக்கொண்டிருந்தார் என்று பக்கத்து வீட்டு பால் வாவிடிஸ் கூறினார்.
கணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு வந்த பொலிசார் ஒரு பெண் இறந்து கிடந்ததையும், தலையில் காயத்துடன் ஒரு சிறுவனையும் கண்டுபிடித்தனர்.
குரேரா தனது மகனையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது, அவர் உயிருக்கு ஆபத்தான தலை காயத்துடன் தப்பித்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
நள்ளிரவுக்கு சற்று முன் பெரேராவின் சான்டர்ஸ்ட் வீட்டில் இந்த பயங்கரம் நடந்தது.