27.8 C
Jaffna
January 23, 2025
Pagetamil
இலங்கை

நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் வெற்றி!

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் புதன்கிழமை(30) தவிசாளர் ப.மயூரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் 3 உறுப்பினர்கள், மணிவண்ணன் தரப்பின் 3 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 4 உறுப்பினர்கள், சுயேச்சை குழுவின் 2 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலா ஒரு உறுப்பினர் என 15 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.

20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில், இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் 6 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் 5 உறுப்பினர்களும் (மணிவண்ணன் தரப்பு 3, தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2), ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் 4 உறுப்பினர்களும், சுயேட்சை குழு சார்பில் 2 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் தலா ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புறக்கோட்டையில் சட்டவிரோத மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்

east tamil

அனர்த்த உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகை உயர்வு: அரசு அனுமதி

east tamil

தெமோதர ஜங்சனில் லொரி விபத்து

east tamil

கனடாவில் துயரச்சம்பவம்: யாழ் வாசியும், குழந்தையும் விபத்தில் பலி!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தல் சிறப்பு ஏற்பாட்டு சட்டமூலத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு!

Pagetamil

Leave a Comment