29.5 C
Jaffna
March 28, 2024
விளையாட்டு

ஜேர்மனி- ஸ்பெயின் ஆட்டம் சமனிலை!

நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி இடையிலான போட்டி சமநிலையில் முடிந்துள்ளது. ஆட்டம் முடிய இருந்த கடைசி சில நிமிடங்களில் தோல்வியை தவிர்ப்பதற்கான அந்தவொரு கோலை பதிவு செய்தது ஜெர்மனி. அதற்கு முன்னர் வரை அந்த அணி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் ஸ்பெயின் அணியின் தடுப்பு அரணை தகர்க்க முடியவில்லை.

குரூப் ‘இ’ பிரிவில் நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை செய்தன. இதற்கு முன்னர் நடைபெற்ற குரூப் சுற்றுப் போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றியும், ஜெர்மனி தோல்வியையும் தழுவி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த போட்டியை போலவே ஸ்பெயின் அணி கோல் மழை பொழியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜெர்மனி அதனை கட்டுப்படுத்தி இருந்தது. ஆனாலும் இந்த ஆட்டத்தில் சுமார் 65 சதவீதம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் ஸ்பெயின் வீரர்கள். அதன் மூலம் 637 பாஸ்களை அந்த அணி மேற்கொண்டது. முதல் பாதி ஆட்டம் கோல் இன்றி முடிந்தது.

இரண்டாவது பாதியில் 62-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தார் ஸ்பெயின் வீரர் மொராட்டா. அதற்கு பதில் கோலை பதிவு செய்ய சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டது ஜெர்மனி. நிக்லாஸ் ஃபுல்க்ரக், 83வது நிமிடத்தில் கோல் பதிவு செய்து தோல்வியை தவிர்த்தார். இந்த பிரிவில் ஸ்பெயின் அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

29 வயதான நிக்லாஸ் ஃபுல்க்ரக் அடித்த கோல்தான் ஜேர்மனியின் உலகக்கோப்பை கனவை உயிரோடு வைத்துள்ளது.  ஃபுல்க்ரக்கிற்கு இது மூன்றாவது சர்வதேச போட்டியாகும். அவரது வாழ்க்கையின் பெரும்பகுதி ஜெர்மன் கால்பந்தின் கிளப் மட்ட போட்டிகளிலேயே ஆடி வந்தார். ஆனால் இந்த சீசனில் வெர்டர் ப்ரெமெனுக்காக ஆடிய அவரது ஃபோர்ம், உலகக்கோப்பை அணியில் இடத்தை பெற்றுக்கொடுத்தது. இந்த சீசனில் தனது கிளப்பிற்காக 10 கோல் அடித்துள்ளார்.

ஸ்பெயினிற்கு எதிராக அவர் அடித்தது ஜேர்மனிக்காக அவர் அடித்த இரண்டாவது கோல். அவர் அடித்த மிகப்பெரிய கோலாக இருக்கலாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குஜராத்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே!

Pagetamil

தோல்வியின் பிடியில் பங்களாதேஷ்

Pagetamil

இரண்டாவது இன்னிங்ஸிலும் தனஞ்ஜய, காமிந்து சதம்: பங்களாதேஷின் வெற்றியிலக்கு 510

Pagetamil

பங்களாதேஷ் அணி 188 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது!

Pagetamil

சிஎஸ்கே புதிய கப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

Pagetamil

Leave a Comment