நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட பிரேரணை இன்று (21) காலை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பிலவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இனோகா பெரேரா, நீதிமன்றில் உண்மைகளை சமர்ப்பித்த போது, பாராளுமன்ற உறுப்பினர் யாத்திரைக்காக இந்தியா செல்லவுதாகவும், பயணத்தடையை நவம்பர் 23 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நீக்குமாறு கோரினார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கோரப்பட்ட காலத்தில் பயணத்தடையை நீக்கியது.
அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான நிறுவனமொன்றின் பங்குகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு சர்வதேச பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான நிறுவனத்தின் பங்குகளை போலியான பவர் ஒஃப் அட்டர்னி மூலம் விற்கும்போது, பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பிலவுக்கு 19 மில்லியன் ரூபாயை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.