பண்டாரகம – களுத்துறை பிரதான வீதியின் மொரந்துடுவ பிரதேசத்தில் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரு இளைஞர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
வாதுவ பொதுப்பிட்டிய பாணப்பிட்டிய வீதியைச் சேர்ந்த யசிரு சம்பத் பெர்னாண்டோ மற்றும் வாத்துவ, தெல்துவ ஆரியகம பகுதியைச் சேர்ந்த சந்தேஷ் சுலோச்சன பியரத்ன ஆகிய இரு 18 வயதுடைய இளைஞர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞர்கள் இருவரும் களுத்துறை பண்டாரகம வீதியில் மற்ற இளைஞர்கள் குழுவுடன் உல்லாசமாக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட போது, நேருக்கு நேர் மோதியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இரு இளைஞர்களுடன் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த ஏனைய இளைஞர்கள் விபத்தின் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மொரந்துடுவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் வந்து வீதியில் படுகாயமடைந்த இரு இளைஞர்களையும் கோனதுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர்கள் உயிரிழந்தனர்.