மன்னார் மாவட்ட செயலகமும்,மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவை யும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் ‘மன்னெழில் -11’ மலர் வெளியீடு,2022ம் ஆண்டுக்கான கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும் புதன்கிழமை (16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவை யின் தலைவருமான திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்டத்தின் கலை,பண்பாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு ஊடகத்துறை மூலமாக தமது அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்பை வழங்கி வரும் மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் 6 பேருக்கு ‘செய்திச் செம்மல்’ என்னும் கௌரவ விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விருந்தினர்களாக கலந்து வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ராஜ மல்லிகை சிவசுந்தரம் சர்மா, வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் லிங்கேஸ்வரி துணைவன் ஆகியோர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருடன் இணைந்து வழங்கி வைத்தனர்.