மடிக்கணினியின் சார்ஜரை மின் செருகியுடன் இணைக்க முயன்ற 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி நேற்று (16) உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அம்பலாங்கொடை இடிகட்டிய பகுதியைச் சேர்ந்த செனத் இந்துவர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெறும் போது மாணவர் குளித்திருந்ததாகவும் ஈரத்துணியை அணிந்திருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
மின்சாரம் தாக்கியபோது மடிக் கணினியை அவர் மடியில் வைத்திருந்தார். அப்போது அவர் ஈரமான துண்டை அணிந்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மின்சாரம் தாக்கியதில் பலத்த காயமடைந்த இந்த மாணவன் முதலில் அம்பலாங்கொட பொலத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1