மன்னார் மத்திய பேருந்து நிலையத்தில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை(14) காலை நீரிழிவு உள்ளிட்ட தொற்றா நோய்களை கண்டறிவதற்கான பரிசோதனை இடம் பெற்றது.
மன்னார் நகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் பிராந்திய தொற்றா நோய்கள் தடுப்பு பிரிவினர் இணைந்து குறித்த பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதன் போது பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தமக்கு தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதனின் பணிப்புரைக்கு அமைவாக வைத்தியர்கள் சுகாதார பிரிவினர் இணைந்து கொண்டு குறித்த பரிசோதனைகள் முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1