போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கைது செய்யுமாறு குறிப்பிட்டு, பாணந்துறை தெற்கு தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பெண் கான்ஸ்டபிள்கள் இருவரை கழுத்தை பிடித்து இழுத்து ஆவேசமாக நடந்து கொண்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை கோரியுள்ளது. .
இந்த அறிக்கையை இன்று (14) வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.




