இலங்கையில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொழுநோய் எதிர்ப்பு பிரச்சாரத்தின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
தோல் நிறமாற்றம் காணப்பட்டாலோ அல்லது விரல்கள் மற்றும் கால்களில் உணர்வின்மை, தசை பலவீனம் அல்லது பக்கவாதம் போன்றவற்றை உணர்ந்தாலோ உடனடியாக மருத்துவ நிபுணரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றார்.
தொழுநோயாளியை கண்டறிந்து, உரிய சிகிச்சை அளித்தால், மற்றொருவருக்கு நோய் பரவாமல் தடுக்க முடியும் என்றார்.
அடையாளம் காணப்பட்ட நோயாளியின் குடும்ப உறுப்பினர்களை பரிசோதித்து அவர்களுக்கு தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம் என்றும் அவர் கூறினார்.
பாடசாலை மாணவர்களிடையே இந்நோய் பரவுவது அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ரணவீர தெரிவித்தார்.
மேல் மாகாணம், குருநாகல் மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிகளவான நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதை அவதானிக்கின்ற நிலையில், குறித்த பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.