1 வருடமாக வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட 14 வயது சிறுமி: 73 வயதானவர் முதல் 14 வயதானவர் வரை 6 பேர் கைது!

Date:

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் 6 சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் (06) கிரிதிவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களில் சிறுமியின் உறவினரான 73 வயதுடைய ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹப்பிட்டிய, வதுருகம பகுதியைச் சேர்ந்த 73 வயது உறவினரே சிறுமியை முதலில் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

“மற்ற சந்தேகநபர்கள் முறையே 14, 16, 17, 18, 19 வயதுடையவர்கள்” என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களில் நால்வர் வதுருகம ஹப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் மாத்திரம் வரகாபொல கம்மலேவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐந்து சந்தேக நபர்களும் சிறுமியுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சிறுமி முதன்முதலில் 2021 இல் அவரது உறவினரால் வன்புணரப்பட்டார்.

அதன்பிறகு, அவர் மற்றவர்களால் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் மாயம்

புத்த சாசனம், சமய விவகாரங்கள் மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில்...

Update: பயணப்பொதியிலிருந்த பெண்ணின் சடலம்; நடந்தது என்ன?

சீதுவ பகுதியில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்த 69 வயது...

வீரவன்சவுக்கு அழைப்பாணை

முன்னாள் தேசிய சுதந்திர முன்னணித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்