நடப்பு ரி20 உலகக் கோப்பை தொடர் அரையிறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எதிர்பார்த்த சில அணிகள் ஏமாற்றமளித்து, சூப்பர் 12 சுற்றோடு வெளியேறி உள்ளன. அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, ஆசியக்கோப்பை “திடீர்“ சாம்பியன் இலங்கை போன்ற அணிகள் அடங்கும்.
இந்த சூழலில் வரும் 2024 உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ள 12 அணிகளின் விவரம் குறித்து அறிந்து கொள்வோம்.
இந்த தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. 55 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தொடரை நடத்தும் அணிகளான மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
அதோடு நடப்பு ரி20 உலகக் கோப்பை தொடரில் டாப் 8 இடங்களை பிடித்துள்ள அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
அதே போல ஐசிசி ரி20 தரவரிசை பட்டியல் அடிப்படையில் இரண்டு அணிகளும் தகுதி பெற்றுள்ளன.
இது தவிர ஆபிரிக்க தகுதி சுற்றில் 2 அணிகள், அமெரிக்க தகுதி சுற்றில் 1 அணி, ஆசிய தகுதி சுற்றில் 2 அணிகள், கிழக்கு ஆசிய-பசிபிக் தகுதி சுற்றில் 1 அணி, ஐரோப்பிய தகுதி சுற்றில் 2 அணிகள் என மொத்தம் 8 அணிகளும் இதில் பங்கேற்க உள்ளன.
இதுவரை தகுதி பெற்றுள்ள 12 அணிகள்-
மேற்கிந்திய தீவுகள்
அமெரிக்கா
இந்தியா
இங்கிலாந்து
நியூஸிலாந்து
பாகிஸ்தான்
அவுஸ்திரேலியா
தென்னாபிரிக்கா
இலங்கை
நெதர்லாந்து
பங்களாதேஸ்
ஆப்கானிஸ்தான்



