பேராதனை பல்கலைகழகத்தில் வட்ஸ்அப் மூலம் ஆபாசப்பட பகடிவதை: பொலிசார் விசாரணை!

Date:

பேராதனை பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று புதிய மாணவர்களுக்கு இணையத்தளத்தில் ஆபாச இணையத்தளங்களின் முகவரிகளை அனுப்பி அவற்றைப் பார்த்து பதிலளிக்குமாறு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் பகடிவதை சம்பவம் பற்றி விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார விஞ்ஞான பீடத்தின் புதிய மாணவர் ஒருவர் முறைப்பாடு செய்ததையடுத்து, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தலைமை ஒழுக்காற்று அதிகாரி சனிக்கிழமை (5) பேராதனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

புதிய மாணவர்களின் தொடர்புத் தொலைபேசி எண்களை உள்ளடக்கி, இணை சுகாதார அறிவியல் பீடத்தின் மூத்த மாணவர்கள் குழு ஒரு வட்ஸ்அப் குழுவை உருவாக்கி, அதற்கு ஆபாசமான இணையதளங்களின் முகவரிகள் மற்றும் புகைப்படங்களை அனுப்பியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவற்றை பார்த்து, தாம் எழுப்பிய வினாக்களிற்கு பதிலளிக்குமாறு புதிய மாணவர்களை அவர்கள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

புதிய மாணவர்களை ஆபாசமான காட்சிகள் மற்றும் புகைப்படங்களைப் பார்த்த பின்னர் பதிலளிக்குமாறு கோரிய சில அச்சுறுத்தும் ஒலி நாடாக்கள் அடங்கிய தொலைபேசி இலக்கத்தையும் ஒழுக்காற்று அதிகாரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

மாணவர்கள் அநாமதேயமாக புகார்களை அளிப்பதற்காக இணைய பக்கமொன்றை பல்கலைக்கழகம் திறந்துள்ளது. அதன் மூலம் புதிய மாணவர் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்