அணி வீரர்கள் முன்பாக தனுஷ்க குணதிலக இழுத்துச் செல்லப்பட்டார்: புதிய தகவல்கள்!

Date:

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விமான நிலையத்திற்கு புறப்படுவதற்காக ஹொட்டலில் தயாராகி,  அணியின் பேருந்திலிருந்து, சக வீரர்களிற்கு முன்பாக அவர் பொலிசாரால் இழுத்துச்  செல்லப்பட்டதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டுள்ளன.

ஒன்லைன் டேட்டிங் செயலி மூலம் அவர் சந்தித்த சிட்னி பெண்ணை சில மணித்தியாலங்களில் மீண்டும் மீண்டும் சில தடவைகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டார்.

இலங்கை அணியின் முன்னணி வீரரான 31 வயதான தனுஷ்க குணதிலக, கடந்த வாரம் சிட்னியின் கிழக்கின் ரோஸ் பேயில் உள்ள ஒரு வீட்டில் 29 வயது பெண் ஒருவரையே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

நவம்பர் 2ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து தனுஷ்க குணதிலக்க மீது அனுமதியின்றி உடலுறவு கொண்டதாக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

குழந்தைகள் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் குற்றங்கள் குழுவைச் சேர்ந்த துப்பறியும் கண்காணிப்பாளர் ஜெய்ன் டோஹெர்டி, இந்த ஜோடி டேட்டிங் ஆப் டிண்டரில் அறிமுகமானதாக கூறினார்.

புதன்கிழமை சந்திப்பதற்கு முன்பு வீடியோ அழைப்பு உட்பட பல்வேறு தளங்களில் தொடர்பு கொண்டனர்.

இருவரும் அன்றைய தினம் ஹொட்டலொன்றில் சந்தித்து மது அருந்திய பின்னர், யுவதியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு இரண்டு முறை யுவதியை தாக்கி, கழுத்தை நெரித்து உடலுறவு கொண்டுள்ளார். அத்துடன், ஆணுறை அணியவும் மறுத்துள்ளார்.

அந்தநடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் சசெக்ஸ் தெரு ஹோட்டலில் வைத்து குணதிலக கைது செய்யப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தினர்.

அவர் சிட்னி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அனுமதியின்றி உடலுறவு கொண்டதாக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

குணதிலகாவுக்கு பிணை மறுக்கப்பட்டது. சிட்னியின் டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்படுவார். மீண்டும் பிணை மறுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு குணதிலகா சுர்ரி ஹில்ஸ் காவல் நிலையத்தில் தங்கியிருந்த அறைக்குள் கழித்தார்.

அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறுவதற்கான எந்தவொரு கோரிக்கையும் நிராகரிக்கப்படுவதைப் பற்றி அவர் “மிகவும் கவலைப்படுவதாக” அவரது சட்டத்தரணி ஆனந்த அமரநாத் ஊடகங்களிடம் கூறினார்.

“அது ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்திற்கு வரும் என்று அவர் நம்பினார், அதனால் அது நடக்காததால் அவர் ஏமாற்றமடைந்தார், ஆனால் நடப்பதை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்” என்று அமரநாத் கூறினார்.

“அவர் மீண்டும் இலங்கைக்கு வர முடியாவிட்டால் என்ன நடக்கும் என்பது பற்றி அவர் மிகவும் கவலைப்படுகிறார் … இவை கடுமையான குற்றச்சாட்டுகள் மற்றும் இது இறுதி செய்யப்படுவதற்கு ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் ஆகலாம், எனவே அவர் அதைப் பற்றியும் மிகவும் கவலைப்படுகிறார்.” என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்