தமிழ் அரசியல் கைதிகளிற்கு நிதியுதவி!

Date:

அண்மையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளிற்கு லைக்கா நிறுவன உரிமையாளர் நிதியுதவியளித்துள்ளார்.

பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் அண்மையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

கிட்டத்தட்ட இளமைக்காலம் முழுவதையும் சிறையில் கழித்த இந்த அரசியல் கைதிகளிற்கு லைக்கா நிறுவன உரிமையாளர் நிதியுதவியளித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹொட்டலில் குறிப்பிட்ட அரசியல் கைதிகளிற்கு மதிய போசனமளித்து, நிதியுதவியுமளித்தார்.

அந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதனும் கலந்து கொண்டிருந்தார்.

இதேவேளை, 8 தமிழ் அரசியல் கைதிகளிற்கும் தலா ரூ.25 இலட்சம் ரூபா வழங்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

நேற்று (20) நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலையை 5 ரூபாவினால்...

நீதிமன்றத்தில் அம்பலமாகும் உயிர்த்த ஞாயிறு சதித்திட்டம்: கோட்டாவின் கூலிப்படையாக செயற்பட்ட பிள்ளையான் குழு!

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த நீதிமன்ற...

மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்கு காணியை விடுவிக்க பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்