புகையிரத பயணிகளை வவுனியா- மதவாச்சியிடையே பேருந்தில் கொண்டு செல்ல ஏற்பாடு!

Date:

யாழ்தேவி புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக கொழும்பில் இருந்து காங்கேசன்துறை வரையான வடக்கு புகையிரத பாதையில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, புகையிரத பயணிகளை வவுனியாவிற்கும் மதவாச்சிக்குமிடையில் ஏற்றிச் செல்ல பேருந்துகளை பயன்படுத்தவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பில் இருந்து காந்கேசன்துறை செல்லும் புகையிரதங்கள் மதவாச்சி வரையும் சேவையில் ஈடுபடவுள்ளன. காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு புறப்படும் புகையிரதங்கள் வவுனியா வரை பயணிக்கும்.

வவுனியாவிற்கும் மதவாச்சிக்குமிடையில் பேருந்துகள் மூலம் பயணிகள் கொண்டு செல்லப்படுவார்கள்.

இதேவேளை, இந்த தடம் புரண்டதன் காரணமாக, இன்று (06) காலை காங்ககேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லவிருந்த நகரங்களுக்கு இடையிலான புகையிரதம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன், கொழும்பில் இருந்து மதவாச்சி மற்றும் காங்ககேசன்துறையிலிருந்து வவுனியா வரையான ஏனைய புகையிரதங்கள் வழமையாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு கண்ணகி வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு ஸ்மார்போர்ட் வழங்கி வைப்பு

காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தும்...

நிந்தவூர் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் இம்ரியாஸுக்கு தேசிய மட்டத்தில் 3 கௌரவங்கள்

நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்   வை....

சாய்ந்தமருது வொலிவேரியன் வீதி சீரமைப்பு -துரித நடவடிக்கை மூலம் வீதியமைக்கும் பணிகள் ஆரம்பம்

சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்