தமிழ் தேசிய கூட்டமைப்பின் துணுக்காய் பிரதேச இளைஞர் அணி நிர்வாகத் தெரிவு!

Date:

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் பிரதேச இளைஞர் அணி நிர்வாகத் தெரிவு இன்றைய தினம் காலை 10:00மணிக்கு மல்லாவி கோவில் பொது மண்டபத்தில் துணுக்காய் பிரதேச சபையின் துணைத் தவிசாளர் சிவகுமார்(குட்டி) தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்து கொண்டதுடன் யோகாம்பிகை சமேத யோகபுர நாதர் ஆலய குருக்கள் அதிவணக்கத்துக்குரிய ஞானப்பிரகாசம் ஜயாவும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை முன்னாள் அமைச்சர் சிவநேசன் பவன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் அணி அமைப்பாளர் யூட்சன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் ஆறுமுகம் ஜோன்சன் மாந்தை கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சரஸ்வதி,கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர், மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் துணுக்காய் பிரதேச இளைஞர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

துணுக்காய் பிரதேச ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் அணி நிர்வாகத் தலைவராக யதுசனும்,செயலாளராக திரிசயனும்,பொருளாளராக கவிந்தனும் மேலும் உப தலைவர், செயலாளர் உட்பட 11பேர் கொண்ட நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.

இவ் நிகழ்வில் துணுக்காய் பிரதேச மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்களான தமிழ்நிலவன்,லிந்துஜா,துஸ்யந்தினி ஆகியோர் மாகாண மட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய சாதனையாளர்களாக பாராளுமன்ற உறுப்பினரால் மாலை அணிவித்து,பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் ஊக்குவிப்பு நிதியுதவியும் கட்சியின் நிர்வாகத்தினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் இளைஞர் அணி செயலாளரால் நன்றியுரையுடன் கட்சியின் பிரதேச இளைஞர் அணி நிர்வாகத் தெரிவு நிறைவு செய்யப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்