ஆட்காட்டி வெளி துயிலுமில்லம் சிரமதானம்: பொலிசார் எச்சரிக்கை!

Date:

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினரால் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (6) காலை சிரமதான பணிகள் இடம் பெற்றது.

எனினும் அங்கு சென்ற அடம்பன் பொலிஸார் சிரமதானம் மேற்கொண்டமை குறித்து விசாரணைகளை மேற்கொண்ட தோடு, மாவீரர் தின நினைவேந்தல் மேற்கொண்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அச்சுறுத்தியுள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில்,மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(6) காலை சிரமதான பணிகள் இடம் பெற்றது.

எதிர்வரும் 27ஆம் திகதி (27-11-2022) மாவீரர் தின நினைவேந்தல் இடம் பெறவுள்ள நிலையில் வடக்கு,கிழக்கு பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் சிரமதானம் செய்யப்பட்டு,மாவீரர்களின் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு,இறுதி நாளான எதிர்வரும் 27ஆம் திகதி மாலை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறும்.

இந்த நிலையில் மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில்,மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(6) காலை சிரமதான பணிகள் இடம் பெற்றது.

சிரமதான நிகழ்வில் மாவீரர்களின் உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

சிரமதானம் முடியும் நிலையில் துயிலும் இல்ல பகுதிக்கு வந்த அடம்பன் பொலிஸார் சிரமதானம் மேற்கொண்டமை குறித்து விசாரணைகளை மேற்கொண்டதோடு, எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தின நினைவேந்தல் மேற்கொண்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.என தெரிவித்து அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் அங்கிருந்து சென்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மத்தியகுழு கூட்டத்தில் வெடித்த சுமந்திரன்- சிறிதரன் மோதல்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வழக்கம் போல பெரும்...

கள்ளக்காதலனுடன் இணைந்து தாயைக் கொன்ற மகள்

திரப்பனை நகர எல்லைக்குட்பட்ட அத்துங்கம சந்திப்புக்கு அருகே உள்ள ஒரு வீட்டில்...

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்