ஐ.நா பொதுச்செயலாளர்- ரணில் சந்திப்பு!

Date:

எகிப்தின் கெய்ரோவைச் சென்றடைந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கே ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது, ஜனாதிபதி அரசாங்கத்தின் தேசிய சுற்றாடல் கொள்கை தொடர்பில் செயலாளர் நாயகத்திற்கு விளக்கமளித்தார்.

இதன் போது 1978 இல் இலங்கைக்கான தனது முதலாவது விஜயம் தொடர்பில் செயலாளர் நாயகம், ஜனாதிபதியிடம் நினைவுகூர்ந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி இன்று (06) காலை எகிப்து பயணமானார்.

சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் தினுக் கொலம்பகே மற்றும் ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளர் சென்ட்ரா பெரேரா ஆகியோரும் ஜனாதிபதியுடன் எகிப்து சென்றுள்ளமை குறிப்பிடதக்கது.

spot_imgspot_img

More like this
Related

சாய்ந்தமருது வொலிவேரியன் வீதி சீரமைப்பு -துரித நடவடிக்கை மூலம் வீதியமைக்கும் பணிகள் ஆரம்பம்

சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்...

தையிட்டி காணி ஆக்கிரமிப்பு மற்றும் பொய் வழக்குகளுக்கு எதிராகத் தளராது போராடுவோம்!

தையிட்டியில் தமிழ் மக்களின் சொந்தக் காணிகளைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துப் பிரம்மாண்ட விகாரை...

நிந்தவூரில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கும் பாலர்களுக்கும் மகிழ்ச்சிப் பரிசுகள்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, நிந்தவூர் பிரதேசத்தில் விசேட தேவைகளைக் கொண்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்