ரணில் வலை: மேலும் சிலருக்கு அமைச்சு பதவி!

Date:

வரவு செலவுத் திட்ட காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் சில அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்க எதிரணிகள் முயற்சிக்கும் நிலையில், அதை முறியடிக்கும் உத்தியாக இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைச்சரவையின் அளவை ஜனாதிபதி 30 ஆக அதிகரிக்க முடியும்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி, சி.பி. ரத்நாயக்க மற்றும் எஸ்.எம்.சந்திரசேனவுக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் புதிய அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்கள் அமைச்சரவைக்கு நியமிக்கப்படுவார்கள் என தெரியவருகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு பொதுநூலகம் பொதுமக்கள் பாவனைக்கு கையளிப்பு

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி அநுர...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அசாத் மௌலானாவிடம் வாக்குமூலம் பதிவு!

தற்போது பிரான்ஸில் உள்ள அசாத் மௌலானாவிடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்...

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவது புலிகளை மகிமைப்படுத்துவதாக அமையக்கூடாது!

இலங்கையில் போரினால் உயிரிழந்த பொதுமக்களின் நினைவுகூறுதலில் ஒரு சமச்சீரான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்