ரி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் இலங்கையை 4 விக்கெட்டுக்களால் வீழ்த்திய இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.
இலங்கையின் தயவிற்காக காத்திருந்த அவுஸ்திரேலியாவும் தொடரிலிருந்து வெளியேறியது.
முதலில் ஆடிய இலங்கை 8 விக்கெட் இழப்பிற்கு 141 ஓட்டங்களை பெற்றது. பதம் நிசங்க 67 ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில் மார்க் வூட் 26 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இலக்கை விரட்டிய இங்கிலாந்து 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களை பெற்றது.
அலெக்ஸ் ஹேல்ஸ் 49, ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களை பெற்றனர்.



