ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி அங்கொட தொற்று நோய் நிறுவகத்திற்கு (IDH வைத்தியசாலை) அறிகுறிகள் காணப்பட்டதன் காரணமாக சிகிச்சைக்காக வந்த போது அவருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன இன்று (4) காலை அங்கொடை தொற்று நோய் நிறுவகத்திற்குச் சென்று, விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரமவைச் சந்தித்து, பரிசோதனை மேற்கொண்டார்.
முன்னாள் ஜனாதிபதி சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் தற்போது வீட்டில் வைத்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு எந்தவிதமான கடுமையான அறிகுறிகளும் இல்லை என்றும், கொவிட் தடுப்பூசியின் அனைத்து டோஸ்களையும் பெற்றுள்ளதாகவும் பேச்சாளர் குறிப்பிட்டார்.



