24.2 C
Jaffna
January 21, 2025
Pagetamil
குற்றம்

வெள்ளத்தில் கழிவுகளை வீசும் விசமிகள்

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் வீதியையும் , கோவில் வீதியையும் இணைக்கும் கோவில் ஒழுங்கை பகுதிகளில் விஷமிகள் கழிவுகளை வீசி வருவதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

தற்போது மழை காலம் ஆரம்பித்ததுள்ள நிலையில் , குறித்த ஒழுங்கை பகுதியில் வெள்ளநீர் தேங்கி நிற்பதனால் , ஒழுங்கைக்குள் வசிப்பவர்கள் போக்குவரத்து உள்ளிட்ட வியடங்களில் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது விஷமிகள் அந்த ஒழுங்கைக்குள் கழிவுகளை கொட்டுவதனால் , பலத்த இன்னல்களை அப்பகுதிகளில் வசிப்போர் எதிர்நோக்கியுள்ளனர்.

வீசப்படும் கழிவுகள் மழை வெள்ளத்தில் மிதந்து வீட்டு வளவுக்குள் வருவதனாலும், வீதிகளில் வெள்ளநீருடன் கழிவுகள் சிதறி காணப்படுவதானலும் இன்னல்களை எதிர்நோக்குகின்றனர்.

இது தொடர்பில் மாநகர சபை உள்ளிட்ட தரப்புகளுக்கு அறிவித்துள்ள போதிலும் , உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கையை உலுக்கிய கொள்ளைக்கும்பல் கைது: 36 வயது தலைவி… 22 வயது கணவன்!

Pagetamil

கடன் தொல்லையால் இளம் தம்பதி விபரீத முடிவு: காட்டுக்குள் அருகருகாக சடலங்களாக மீட்பு!

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியைக்கு விளக்கமறியல்!

Pagetamil

வெளிநாடு சென்ற காதலன் தொடர்பு கொள்ளாததால் இளம்பெண் விபரீத முடிவு

Pagetamil

வவுனியா சிறைச்சாலை கூடா நட்பு: கணவனின் நண்பனுடன் பியர் குடித்த பின் நடந்த கொடூரம்!

Pagetamil

Leave a Comment