நாளை ஆரம்பிக்கிறது ரி20 உலகக்கோப்பை திருவிழா: 5.6 மில்லியன் டொலர் பரிசுகள்!

Date:

சிட்னி ரி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை காண 6 இலட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்கள் விற்பனையாகி உள்ளன.

ரி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியாவில் நாளை (16) தொடங்குகிறது. இந்த தொடரின் ஆட்டங்களில் 7 நகரங்களில் நடைபெற உள்ளன.

முதல் சுற்று நாளை தொடங்கும் நிலையில் பிரதான சுற்று 22ஆம் திகதி ஆரம்பமாகிறது. போட்டியை நடத்தும் அவுஸ்திரேலியா சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் 22ஆம் திகதி நியூஸிலாந்தை சந்திக்கிறது.

ஒட்டுமொத்தமாக 45 நாட்கள் நடைபெறும் இந்த ரி20 கிரிக்கெட் திருவிழாவை காண்பதற்கு 6 இலட்சத்துக்கும் மேலான டிக்கெட்கள் விற்று தீர்ந்துள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

தொடக்க நாளில் நடைபெறும் முதல் சுற்று ஆட்டங்களில் இலங்கை – நமீபியா, ஐக்கிய அரபு அமீரகம் – நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டங்கள் சுமார் 36 ஆயிரம் இருக்கைகள் கொண்ட ஜீலாங்கில் உள்ள கார்டினியா பார்க் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன.

2022 ஐசிசி ஆண்கள் ரி20 உலகக் கோப்பையின் போது அவுஸ்திரேலியா முழுவதும் ஏழு மைதானங்கள் பயன்படுத்தப்படும், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப் போட்டியும், அரையிறுதிப் போட்டிகள் அடிலெய்ட் ஓவல் மற்றும் சிட்னி கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறும்.

பிரிஸ்பேனில் உள்ள கப்பா, ஜீலாங்கில் உள்ள கார்டினியா பார்க், ஹோபார்ட்டில் உள்ள பெல்லரிவ் ஓவல் மற்றும் பெர்த் ஸ்டேடியம் ஆகிய  மைதானங்களில் ஏனைய போட்டிகள் நடைபெறும்.

சம்பியனுக்கு ரூ.58.42 கோடி பரிசு 

ரி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர் (ரூ.58.42 கோடி) பரிசுத் தொகை வழங்கப்படும். 2வது இடம் பிடிக்கும் அணிக்கு 800,000 அமெரிக்க டொலர் (ரூ.29.2 கோடி) கிடைக்கும்.

அரை இறுதியில் தோல்வியை சந்திக்கும் இரு அணிகளும் தலா 400,000 அமெரிக்க டொலர்களை (ரூ.14 கோடி) பெறும்.

சூப்பர் 12 சுற்றில் வெளியேறும் 8 அணிகளும் தலா 70,000 அமெரிக்க டொலர்கள் (ரூ.2.5 கோடி) பரிசுத் தொகையை எடுத்துச் செல்லும். சூப்பர் 12 சுற்றில் நடக்கும் 30 ஆட்டங்களில் வெற்றி பெறும் அணிகளிற்கு தலா 40,000 அமெரிக்க டொலர்கள் (ரூ.1.4 கோடி) பரிசளிக்கப்படும்.

முதல் சுற்றில் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெறும் அணிக்கு தலா 40,000 அமெரிக்க டொலர்கள் (ரூ.1.4 கோடி) பரிசளிக்கப்படும். முதல் சுற்றுடன் வெளியேறும் 4 அணிகள் தலா 40,000 அமெரிக்க டொலர்கள் (ரூ.1.4 கோடி) பெறும்.

ரி20 உலகக் கோப்பை தொடர் பரிசுக்காக 5.6 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல் சுற்று

Group A

Namibia, Netherlands, Sri Lanka, United Arab Emirates

Group B

Ireland, Scotland, West Indies, Zimbabwe

சூப்பர் 12

Group 1

Afghanistan, Australia, England, New Zealand, Group A winner, Group B runner-up

Group 2

Bangladesh, India, Pakistan, South Africa, Group B winner, Group A runner-up

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது!

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில்...

பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

பிரபஞ்சத்தில் நிகழும் தீவிரமான நிகழ்வுகளிலிருந்து உருவாகும் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோ...

சுரேஷ் சாலே மீண்டும் சிஐடியின் காவலில்!

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வு சேவையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்