வரக்காபொலவில் மண் சரிவில் சிக்கிய பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தேடுதல் நடவடிக்கையை அடுத்து 47 வயதுடைய பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, 24 வயது மகனை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
50 வயதுடைய தந்தை நேற்று இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டு வரக்காபொல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வரக்காபொல, கொஸ்வத்தை, தும்பலியத்த பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் மீது நேற்று மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்.
பொலிசார் மற்றும் இலங்கை இராணுவத்தினர், அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வரக்காபொல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1