வன்முறை சம்பவங்களின் அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்!

Date:

மே மாதம் 9 ஆம் திகதிக்கு பின்னர் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான விசேட குழுவின் அறிக்கை செப்டம்பர் 8 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

புதிய அமர்வின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்திற்குத் தலைமை தாங்கி இராஜாங்க அமைச்சர் அண்மையில் (23) கருத்து வெளியிட்டார்.

அந்த அறிக்கையின்படி, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒஃப் த ஃப்ளீட் வசந்த கரன்னாகொட, முன்னாள் விமானப்படைத் தளபதி மார்ஷல் ஒஃப் த ஏர் ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஆர். தயா ரத்நாயக்க ஆகியோர் அடங்கிய அந்த குழுவின் அறிக்கையின் படி, பாதுகாப்பு தரப்பினர் தரப்பில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டிருந்தால், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மே மாதம் 9ஆம் திகதிக்குப் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பாதுகாப்புப் படையினர் தரப்பில் குறைபாடுகள் உள்ளதா என்பது குறித்தும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்தும் குழு உறுப்பினர்கள் கவலை தெரிவித்த போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மற்றும் அதற்கு ஆதரவானவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான நாடு கடத்தல் ஒப்பந்தம் தொடர்பாக 1977 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட உத்தரவை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக முன்வைக்க பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் அனுமதியும் பெறப்பட்டது.

2014ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையில் செய்து கொள்ளப்பட்ட நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் பிரகாரம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து குற்றவாளிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான சட்டத் தடைகளை நீக்குவதே இதன் நோக்கமாகும்.

போதைப்பொருள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பது மற்றும் சமூக ஊடகங்களை தவறான பிரச்சாரங்களுக்கு பயன்படுத்துவதை தடுக்கும் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்