ரி20 கிரிக்கெட்டில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கை விக்கெட் இழப்பின்றி விரட்டியடித்த முதல் அணி என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது.
நேற்று கராச்சியில் நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்த சாதனையை படைத்தது.
பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்கள் பாபர் ஆசம், முகமட் ரிஸ்வான் ஜோடி, ரி20 வரலாற்றில் மிகப்பெரிய 10 விக்கெட் வெற்றியை பெற்றனர். ரி20 ரன் சேஸில் 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் ஜோடி என்ற பெருமையையும் பெற்றனர்,
இதற்கு முன்னர் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் சாதனையும் அவர்கள் வசமே இருந்தது. 2021இல் தென்னாபிரிக்காவிற்கு எதிராக 197 ஓட்டங்களை பெற்றதே சாதனையாக இருந்தது. அதனை நேற்று முறியடித்தனர்.
2020 டிசம்பரில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிஸ்வான் ஆடத் தொடங்கியதில் இருந்து, அந்த அணி இரண்டாவதாக துடுப்பாட்டம் செய்து 15 ஆட்டங்களில் வெற்றி பெற்று மூன்றில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது.
இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்களை பெற்றது. இலக்கை விரட்டிய பாகிஸ்தான் 19.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 203 ஓட்டங்களை பெற்று 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாபர் ஆசம் 110, முகமட் ரிஸ்வான் 88 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
, 7 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனிலையில் உள்ளது.
பாபரும் ரிஸ்வானும் 150 அல்லது அதற்கும் அதிகமான பார்ட்னர்ஷிப்பில் இருப்பது இது ஐந்தாவது முறையாகும். இந்த ஜோடி ரி20 போட்டிகளில் 31 சந்தர்ப்பங்களில் ஒன்றாக ஆடியுள்ளனர்.