இலங்கை இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசுவாமி மற்றும் படுகொலை செய்யப்பட்ட அவரது தாயார், சகோதரன், அயலவர் ஆகியோரின் 26வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று (7) இடம்பெற்றது.
செம்மணி பகுதியில், தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
இதில் வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் கிசோர், வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் ச.சஜீவன், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் க.சதீஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1