அத்தனகலு ஓயா மற்றும் களு, களனி, கிங் மற்றும் நில்வல ஆறுகளை சூழவுள்ள பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.
அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் நாட்களில் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
ஏனைய இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.