ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் இருந்து திருடப்பட்ட புத்தர் சிலை மற்றும் புத்தகங்கள் குறித்த தொலைபேசி அழைப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு கிடைத்த தொலைபேசி அழைப்பு தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகைக்கு தீ வைக்கப்பட்ட தினத்தில் திருடபபட்ட புத்தர் சிலை மற்றும் புத்தகங்கள் தம்மிடமுள்ளதாகவும், தாம் கைது செய்யப்படாமல் அவற்றை ஒப்படைக்க விரும்புவதாகவும் ஜனாதிபதி அலுவலகத்தின் பொது தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு ஏற்படுத்தியவர் தெரிவித்திருந்தார்.
திருடப்பட்ட புத்தர் சிலை மற்றும் புத்தகங்களை தம்மிடம் வைத்திருப்பது அச்சமான விடயம் எனவும் அதனை உரிமையாளரிடம் மீள ஒப்படைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நபர் தெரிவித்துள்ளார்.
புத்தர் சிலை மற்றும் புத்தகங்கள் பத்திரமாக இருப்பதாக தொலைபேசியில் தெரிவித்தவர்.
ஜனாதிபதி செயலாளருடன் பேச விரும்புவதாக தெரிவித்தே அழைப்பு ஏற்படுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அழைப்பை பெற்றுக்கொண்ட அதிகாரி, ஜனாதிபதி செயலாளரிடம் கையளித்து மேலதிக விசாரணைகளை இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.