கல்விப் பொதுத்தராதர உயர்தர 2021 பரீட்சையின் பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டது.
பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களின் ஊடாக பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இவ்வருட உயர்தரப் பரீட்சைக்கு 236035 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 36647 தனியார் விண்ணப்பதாரர்களும் தோற்றியதாகவும் மொத்தமாக 272682 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
பெறுபேறுகளின் அடிப்படையில் 171497 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் இது 62.9 வீதமாகும் என்றும் திணைக்களம் கூறுகிறது.
37 பபாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 12 தனியார் விண்ணப்பதாரர்கள் உட்பட 49 விண்ணப்பதாரர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.




