மன்னார் மாவட்ட மக்களிற்கு வெகுவிரைவில் காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்: காதர் மஸ்தான்

Date:

பல தசாப்தங்களாக காணி அனுமதிப்பத்திரங்களின்றி அரச காணிகளில் வசித்து வந்த தலைமன்னார் பியர், செல்வேரி, பெரியகமம், பாவிழுப்பட்டாங்கட்டி குடியிருப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நீண்ட காலமாக அப்பகுதியில் வசித்து வந்த மக்களுக்கும் யுத்தத்திற்கு பிற்பாடு மீளக் குடியேறியோருக்குமான காணி அனுமதிப்பத்திரங்கள் இன்மையால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி இருந்த மேற்படி மக்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து தொடர்ச்சியாக துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட அவர் உயர்மட்டங்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்ததாக அவரால் இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனடிப்படையில் காதர் மஸ்தான் அவர்களின் அழைப்பின் பேரில் உரிய இடத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்ட காணி அமைச்சின் செயலாளர், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர்(LRC), வட மாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட குழுவினர் நிலைமைகளை நேரில் சென்று ஆராய்ந்ததுடன் அப்பகுதி மக்களுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் கொடிய யுத்தம் காரணமாக நீண்ட காலமாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடர் துன்பங்களை இன்னும் அனுபவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் சுதந்திரமாகவும் நிரந்தரமாகவும் வாழ்வதற்கு அங்கீகாரம் மிக முக்கியமானது. இப்பகுதி மக்களின் அனுமதிப்பத்திர விடயத்தில் நான் தொடர் முயற்சிகளை மேற்கொண்டேன். அதற்கான வெற்றியை இந்த மக்கள் வெகுவிரைவில் அனுபவிப்பார்கள் எனக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். மக்களின் சொல்லொனாத் துயரங்களுக்கு முற்றுப்புள்ளி என்பது அவசியமானவொன்று. மக்கள் பிரதிநிதி என்ற வகையில் பேதங்கள் கடந்து அப்பகுதி மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் வெகுவிரைவில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்