குழந்தைகளின் போசாக்குக் குறைபாட்டின் அடிப்படையில் இலங்கை உலகளவில் 6வது இடத்திலும், தெற்காசியாவில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் நாடுகளில் 2வது இடத்திலும் உள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளமையினால் இலங்கையர்களின் உணவு முறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, பாதிக்கப்படக்கூடிய மற்றும் வறிய குடும்பங்களின் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் உள்ள 4.8 மில்லியன் குழந்தைகளின் கல்வி இரண்டு ஆண்டுகளாக ஆபத்தில் இருப்பதாகவும்,ஏதாவது ஒரு அவசர உதவி தேவைப்படுவதாகவும், இலங்கையில்பிராந்திய பணிப்பாளர் ஜோர்ஜ் லரியா-அட்ஜே இலங்கைக்கு விஜயம் செய்ததை தொடர்ந்து Asia UNICEF இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக குழந்தைகளின் கல்வி பல வழிகளில் தடைபட்டுள்ளதாக யுனிசெப் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னர் குழந்தைகள் உண்ணும் சூடான மற்றும் சத்தான பாடசாலை உணவுகள் இப்போது கிடைப்பதில்லை, மாணவர்களுக்கு அடிப்படை எழுதுபொருட்கள் கிடைப்பது கடினமாகிவிட்டது மற்றும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதிகள் சிக்கலாக மாறியுள்ளது என்று UNICEF தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் பொருளாதார அழுத்தம் காரணமாக சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகள் அதிகரித்து வருவதாக யுனிசெஃப் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே 10,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இலங்கையில் நிறுவன பராமரிப்பில் (நன்னடத்தை பராமரிப்பு) உள்ளனர், முக்கியமாக வறுமை மற்றும் குடும்ப உறவுகளின் பற்றாக்குறை காரணமாக ஒரு குழந்தைக்கான அத்தகைய நிறுவனத்திற்கு, அது வளர சிறந்த இடம் அல்ல என்று UNICEF சுட்டிக்காட்டியுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, சில ஏழைக் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமையால் தங்கள் குழந்தைகளை இந்த நிறுவனங்களுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று UNICEF தெரிவித்துள்ளது.
தற்போதைய போக்கு தொடருமானால், குழந்தைகள் தொடர்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தலைகீழாக மாறி, சில சந்தர்ப்பங்களில் நிரந்தரமாக இழக்க நேரிடும் என யுனிசெஃப் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.