யாழ் வாசியின் கடவுச்சீட்டில் இலங்கைக்குள் நுழைய முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

Date:

இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டிற்குள் பிரவேசிக்க முயன்ற பங்களாதேஷ் பிரஜை ஒருவர் நேற்று காலை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

45 வயதான சந்தேக நபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார், ஆனால் அதே விமானத்தில் நாடு கடத்தப்பட்டார்.

சந்தேக நபர் குவைத்தில் இருந்து கொழும்பு வந்த விமானத்தில் நாட்டுக்கு வந்தார்.

சந்தேக நபர், போலி புகைப்படத்துடன் கூடிய இலங்கை கடவுச்சீட்டை சமர்ப்பித்த போதும், அது போலியானது என அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது

குவைத்தில் உள்ள பங்களாதேஷ் தூதரகம் வழங்கிய அடையாளச் சான்றிதழை அவரது பொதிகளில் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

குவைத்தில் உள்ள தரகர் ஒருவர் ஊடாக இலங்கை கடவுச்சீட்டை பங்களாதேஷ் பிரஜை பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த கடவுச்சீட்டு யாழ்ப்பாணத்தில் வசிப்பவருக்கு சொந்தமானது என குடிவரவு அதிகாரிகள் கண்டறிந்தனர்.

எனினும், சந்தேக நபர் அவர் வந்த அதே விமானத்தில் குவைத்துக்கு நாடு கடத்தப்பட்டார்.

spot_imgspot_img

More like this
Related

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...

ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் — பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில்

ஆலிம்களும் சமூகத்தின் அறிவுசார் வளமாக விளங்கும் புத்திஜீவிகளும் இணைந்து செயற்பட்டு, சமகால...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்