பெண் போல வேடமணிந்து திருட்டில் ஈடுபட்டவர் கைது!

Date:

பெண் போல மாறுவேடமணிந்து பொருட்களை திருடிய நபரை களுத்துறை வடக்கு பொலிஸார் நேற்று முனதினம் (26) கைது செய்துள்ளனர்.

அவரால் திருடப்பட்ட குக்கர், தண்ணீர் மோட்டார்கள் உள்ளிட்ட பல பொருட்களை மீட்டனர்.

சந்தேகநபரின் வாக்குமூலங்களின்படி, பெண் வேடமிட்டு, அயலார் வீடுகளுக்குள் பிரவேசிக்கும் போது, ​​அயலவர்களுக்கு சந்தேகம் வராதவாறு, அதற்குப் பயன்படுத்தப்பட்ட 7 புடவைகளையும் கண்டெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

லாகொஸ்வத்த பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

திருக்கோவில் 7கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட வியாபாரிக்கு 14 நாள் விளக்கமறியல்

திருக்கோவில்  பிரதேசத்தில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன்...

இலங்கை எல் நினோ காலநிலைக்குள் நுழைந்தது

இலங்கை தற்போது எல் நினோ (El Niño) காலநிலை தாக்கத்தின் கீழ்...

TEEN விபத்துகள் அதிகரிப்பு; சுகாதார அதிகாரிகள் கவலை

பதின்ம வயதினரிடையே அதிகரித்து வரும் விபத்துகள் குறித்து சுகாதார அதிகாரிகள் தீவிர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்