அரசின் முட்டுக்கட்டையால் யாழ் மாநகரசபைக்கு யப்பான் வழங்கிய கழிவகற்றல் வாகனங்கள் திரும்பின!

Date:

யாழ் மாநகரசபைக்கு யப்பான் அரசு வழங்கிய 4 கழிவகற்றும் பாரவூர்திகளை நாட்டுக்கு கொண்டுவரும் திட்டத்திற்கு அப்போதைய கோட்டாபய அரசு ஒத்துழைக்காததால், பாராவூர்திகளை நாட்டுக்கு கொண்டுவர யாழ் மாநகரசபைக்கு யப்பான் தூதரகம் வழங்கிய ரூ.14.3 மில்லியன் (அமெரிக்க டொலர் 83,432) பணத்தை திரும்ப பெற்றுள்ளது.

ஏப்ரல் 2019 இல், ஜப்பானிய வெளியுறவு அமைச்சகத்தின் இலாப நோக்கற்ற பிரிவான ஜப்பானிய இராஜதந்திரத்தை மேம்படுத்துவதற்கான சங்கம் (SPJD), பயன்படுத்தப்பட்ட 4 கழிவகற்றல் மற்றும் மறுசுழற்சி வாகனங்களை யாழ் மாநகரசபைக்கு வழங்கும்ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

யப்பானில் வைத்து வழங்கப்படும் நான்கு வாகனங்களை இலங்கைக்கு கொண்டு வர, சுங்க அனுமதி மற்றும் உள்ளூர் போக்குவரத்து தொடர்பான செலவுகளிற்காக 14,329,446 ரூபாயை யப்பானிய தூதரகம், யாழ் மாநகரசபையின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டது.

எனினும், தூதரகம் நேரடியாக மாநகரசபைின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்ட இந்த பணத்தை, யாழ் மாநகரசபை பயன்படுத்த, நிதியமைச்சு அனுமதி மறுத்து விட்டது.

இது குறித்து யாழ்மாநகரசபை பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.

3 வருடங்களிற்கு மேலாக திட்டம் தாமதப்பட்டதை தொடர்ந்து, அந்த நிதியை மீளப்பெறுவதாக ஜப்பான் தூதரகம், யாழ்மாநகரசபைக்கு அறிவித்தது. இதற்கான ஆவணங்கள் இரு தரப்பினாலும் இறுதி செய்யப்பட்டு, பணம் மீளப்பெறப்பட்டுள்ளது.

அரசின் முட்டுக்கட்டையால் யாழ் மாநகரசபைக்கு கிடைக்கவிருந்த 4 கழிவு மறுசுழற்சி வாகனங்கள் கிடைக்காமல் போயுள்ளதாக மாநகரசபை வட்டாரங்கள் தெரிவித்தன.

spot_imgspot_img

More like this
Related

சவுதி அராம்கோ ஹெலிகாப்டர் விபத்து: 14 உயிர்களை காவுகொண்ட பேரதிர்ச்சி

சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக...

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் யோசனையை அரசு பரிசீலனை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான...

முதியோர் கொடுப்பனவை மீள வழங்க சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் மாதாந்திர முதியோர் கொடுப்பனவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்