26.7 C
Jaffna
January 14, 2025
Pagetamil
உலகம்

திருமண உறவை பகிரங்கப்படுத்த கோரிய மனைவியை கொன்ற நீதிபதிக்கு மரணதண்டனை!

எகிப்து நாட்டில் நடந்த ஒரு கொலை வழக்கில் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த தனது இரகசிய மனைவியைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் நீதிபதி ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கிசாவில் உள்ள குற்றவியல் நீதிமன்றம், அய்மன் அப்துல் ஃபத்தாஹ் என்ற பிரதிவாதிக்கு எதிரான ஆரம்ப மரணத் தீர்ப்பை வழங்கியது. அதை எகிப்தின் முன்னணி இஸ்லாமிய அதிகாரியான முஃப்தியிடம் ஒப்புதலுக்காக அனுப்ப முடிவு செய்தது. இது நாட்டில் மரண தண்டனைகளில் ஒரு வழக்கமான சட்ட நடைமுறையாகும்.

இதே வழக்கில், நீதிபதியுடன் இணைந்து கொலை செய்த மற்றொரு பிரதிவாதிக்கும் மரணதண்டனை விதித்த நீதிமன்றம், செப்டம்பர் 11 ஆம் திகதி இறுதித் தீர்ப்பை அறிவிக்கும் திகதியாக நிர்ணயித்தது.

நீதிபதி மற்றும் இணை பிரதிவாதி ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனர். நீதிபதி இரகசியமாக திருமணம் செய்த தொலைக்காட்சி தொகுப்பாளர் ஷைமா ஜமாலை கொலை செய்ததாக அவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர்.

கிசாவில் ஒரு பண்ணைக்குள் புதைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

42 வயதான ஷைமா, ஜூன் மாதம் காணாமல் போனதாக அவரது கணவர் அப்துல் ஃபத்தாஹ் புகார் செய்தார்.

எகிப்தின் கிசா நகரத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலிற்கு மனைவியை காரில் அழைத்துச்சென்று இறக்கி விட்டதாகவும், பின்னர் அவரை அழைத்துச் செல்ல  வந்தபோது மனைவியை காணவில்லை என்று நீதிபதி பொலிஸிடம் தெரிவித்தார்.

ஆனால் மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஹகாக்கின் நண்பரான தொழிலதிபர் ஹுசைன் அல்-கராப்லி காவல்துறையினரிடம் சரணடைந்தார்.

ஷைமாவை நீதிபதி அப்துல் ஃபத்தாஹ் இரகசியமாக திருமணம் செய்து, குடும்பம் நடத்தி வந்துள்ளார். தமது திருமணத்தை பகிரங்கப்படுத்துமாறு மனைவி நச்சரித்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, விவகாரத்து செய்து கொள்ளலாமென கூறியுள்ளார். விவாகரத்து செய்ய, அந்த பெண் பெருந்தொகை இழப்பீடு கோரியதால், “குறைந்த செலவில் பிரச்சினையை“ முடிக்க, மனைவியை கொலை செய்யும் முடிவை எடுத்துள்ளார்.

நீதிபதியின் மனைவியைக் கொன்றுவிட்டு, கெய்ரோவின் கிராமப்புறத்திற்கு அருகிலுள்ள ஒரு பண்ணை வீட்டில் அவரது உடலைப் புதைக்க உதவ ஒப்புக்கொண்டதாக ஹுசைன் அல்-கராப்லி ஒப்புக்கொண்டார்.

ஷைமாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அல்-கராப்லி அடையாளம் காட்டினார்.

போலீஸ் விசாரணையில், ஷைமாவை  பண்ணைக்கு நீதிபதி அப்துல் ஃபத்தாஹ் அழைத்துச்சென்று, அங்கு அவரை கைத்துப்பாக்கியால் சுட்டதும், தனது நண்பர் அல் கராப்லியை மனைவியை பிடித்துக்கொள்ளச்செய்து, ஒரு துணியால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்ததும், அடையாளம் தெரியாமல் இருக்க ஷைமாவின் முகத்தில் நைட்ரிக் அமிலம் ஊற்றப்பட்டு எரிக்கப்பட்டதும் தெரிய வந்தது.

அப்துல் ஃபத்தாஹ் மற்றும் அல்-கராப்லி இருவர் மீதும் திட்டமிட்ட கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டனர்.

நீதிபதி அப்துல் ஃபத்தாஹ் சுமார் ஒரு வாரம் தப்பி ஓடிய பிறகு, எகிப்திய நகரமான சூயஸில் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் போது, ​​அல்-கரப்லியின் வழக்கறிஞர்கள், தி ட்ரபிள்மேக்கர் என்ற செய்திப் பேச்சு நிகழ்ச்சியை நடத்திய ஷைமா, நீதிபதி தற்காப்புக்காகச் செயல்பட்டதாக வாதிட்டனர். ஷைமா தனது கணவரை கத்தியால் தாக்கியதாகக் குற்றம் சாட்டியிருந்தார். இறுதியில் ஆதாரம் இல்லாததால் அந்த மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது

இந்த கொடூரமான சம்பவம் எகிப்து முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. அங்கு பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்கள் கடந்த ஆண்டு இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஷைமாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட அதே நேரத்தில், 21 வயதான எகிப்திய மாணவி நைரா அஷ்ரப் அப்தெல் காதர், திருமண முன்மொழிவை மறுத்த ஒருதலை காதலனால் அவரது கல்லூரி வளாகத்தில் கத்தியால் குத்தியதில் கொல்லப்பட்டார்.

உயர்மட்ட கொலைகள் எகிப்திய அரசாங்கம் நாட்டில் பாலின அடிப்படையிலான வன்முறை அதிகரிப்பதைத் தடுக்க சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை தூண்டியுள்ளன.

செப்டம்பரில் அப்துல் ஃபத்தாஹ் கடைசியாக நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். அங்கு எகிப்தின் முன்னணி இஸ்லாமிய அதிகாரியான முஃப்தி நீதிமன்றத்தின் தண்டனையை அங்கீகரிக்க அல்லது மறுக்க உள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உயிருடன் சிக்கினால் தற்கொலை செய்யுங்கள் – கிம் ஜாங் உத்தரவால் அதிர்ச்சி

east tamil

இதுவரை 24 பேரை பலிகொண்ட லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ – உருவானதும் பரவியதும் எப்படி?

Pagetamil

லொஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை கட்டுப்படுத்த சிறைக்கைதிகள் பங்கேற்பு

east tamil

அமெரிக்காவில் பனிப்புயல் – 3,000க்கும் அதிகமான விமானப் பயணங்கள் ரத்து

Pagetamil

ட்ரம்பின் பதவியேற்புக்கு கூகுள், போயிங் மில்லியன் டொலர் நன்கொடை

east tamil

Leave a Comment