இலங்கைப் பின்னணி மொடல் அழகிக்கு பல காதலர்கள்: அதிலொருவருக்கு பல காதலிகள்: மோசடி நகைகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் பொலிசார்!

Date:

சென்னை பூந்தமல்லியில் பைனான்ஸியரை காதல் வலையில் வீழ்த்தி 550 சவரன் நகைகளை அபேஸ் செய்த மொடல் அழகியை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த போலீசார், மொடல் அழகியின் காதலனிடம் இருந்து டுகாட்டி பைக் உள்ளிட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் 100 கிராம் தங்க நகைகளையும் கைப்பற்றி உள்ளனர்.

அந்த காதலனிற்கு பல காதலிகள் இருப்பதால், திருடிய நகைகளை அவர்களிற்கும் கொடுத்துள்ளார்.

சென்னை பூந்தமல்லியில் தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட தொழில் அதிபர் சேகர் என்பவர், தனது வீட்டில் உள்ள 550 சவரன் நகைகளை திருடி, விடுதிக் காதலியான மொடல் அழகியிடம் கொடுத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்தள்ளார்.

இலங்கை பின்னணியுடைய மொடல் அழகி சுவாதி, ஆரம்பத்தில் சினிமா வாய்ப்பு தேடினார். அது கிடைக்காத நிலையில் விபச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். சென்னையிலுள்ள நட்சத்திர ஹொட்டல்களில் தொழிலதிபர்களுடன் பணத்திற்காக உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இப்படி சேகருக்கு ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் சுவாதி மீதான மோகமாகியது. சுவாதி தனக்கு மட்டுமே வேண்டுமென நினைத்த சேகர், வீட்டிலிருந்து பெருமளவு பணம், நகைகளை திருடி சுவாதிக்கு கொடுத்து வந்தார்.

இந்த விடயம் அம்பலமானதும் சேகர், சுவாதி கைது செய்யப்பட்டனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுவாதியிடம் இருந்து நகைகளை மீட்பதற்காக அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டனர். ஆனால் நீதிமன்றம் 3 நாட்கள் மட்டுமே போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது.

போலீசாரின் விசாரணையில் சுவாதிக்கு பக்க பலமாக இருந்து நகைகளை பறிக்க திட்டம் வகுத்து கொடுத்தது அவரது காதலன் என்பது தெரியவந்தது. அவன் கொடுத்த தைரியத்தில் தான் பைனான்ஸியர் சேகரை கைக்குள் போட்டுக் கொண்டு நகைகளை எடுத்து வரச்சொல்லி அபேஸ் செய்தது தெரியவந்தது.

சேகர் கொடுத்த பணத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டுகாட்டி பைக் ஒன்றையும், இருவரும் ஜோடியாக வெளியில் சுற்றுவதற்கு புல்லட் பைக் ஒன்றையும் சுவாதி காதல் பரிசாக வாங்கிக் கொடுத்தது தெரியவந்ததால் இரண்டு பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சுவாதி கொடுத்த நகைகள் அனைத்தையும் காதலன், பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் கடை கடையாக அடகு வைத்தது தெரியவந்ததையடுத்து முதற்கட்டமாக ஒரு கடையில் இருந்து 100 கிராம் நகைகளை மீட்டனர். அடகு கடைகளின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்வதால் போலீசார் சுவாதியை அழைத்துக் கொண்டு அடகு கடைகளில் விசாரிப்பது சிரமம் என்பதை உணர்ந்து அவரை 2 வது நாள் முடிவிலேயே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதே நேரத்தில் பைனான்ஸியர் சேகரிடம் பறித்த நகைகளை எப்படி சுவாதி , தனது இளம் காதலனுக்கு கொடுத்தாரோ, அதே போல அந்த புல்லட் காதலன், சுவாதியிடம் பெற்ற நகைகளை விற்று கிடைத்த பணத்தை வைத்து தனது இளம் காதலிகளான 3 பேரை பார்ட்டிக்கு அழைத்து செல்வது ஊர் சுற்றுவது என்று வாரி இறைத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

வட்டிக்கு வட்டி போட்டு வசூலித்த ரூ 30 லட்சம் ரூபாய் பணம் வகை தெரியாமல் போன நிலையில், அள்ளிச்சென்ற 550 சவரன் நகைகளையாவது மீட்க முடியுமா என்று  காதலன் கை நீட்டும் அடகு கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர் போலீசார்.

spot_imgspot_img

More like this
Related

மக்கா வெறுப்பை விதைக்கும் இடமல்ல; சவூதியில் இடம்பெற்ற விடயம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது!

புனித மக்கா என்பது வெறுப்பையும் பிரிவினையையும் வளர்க்கும் இடமல்ல; மாறாக மன்னிப்பு,...

உள்ளூர் துப்பாக்கியுடன் விவசாயி கைது!

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான் வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த...

சமையலறைக்குள் தீப்பற்றிய எரிவாயு சிலிண்டர்

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு பகுதியில் வீ ஒன்றில் எரிவாயு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்