வவுனியாவில் 15 வயது மாணவன் மாயம்!

Date:

வவுனியா, செக்கட்டிபுலவு பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயது மாணவன் ஒருவனை காணவில்லை என பூவரசங்குளம் பொலிசில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா, பம்பைமடு, செக்கட்டிபுலவு பகுதியில் வசித்து வந்த இராசேந்திரன் கிருபன் என்ற 15 வயது மாணவனே 16.08.2022 அன்று அதிகாலை காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன மாணவன் 16 திகதி அதிகாலை 1 மணியளவில் நித்திரையால் எழுந்து தண்ணீர் அருந்தியதாகவும் அதுவரை வீட்டில் இருந்ததனை அவதானித்ததாகவும் 16 ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் எழுந்து பார்த்தபோது மகன் காணாமல் போயுள்ளதாகவும் தாயார் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளார் என காணாமல் போன மாணவனின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

மாணவன் வகுப்பிற்கு போகாததனால் அவரை தயார் 15ஆம் திகதி கண்டித்திருந்த நிலையில் அதனாலேயே மாணவன் காணாமல் போயிருப்பார் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

எனினும் இவ் விடயம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் மாணவனை யாராவது அடையாளம் கண்டால் 0766922218, 0779987491 குறித்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் மாணவனின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பிக்மீ சாரதியிடம் கொள்ளையடித்தவர்கள் கைது!

இன்று காலை சமூக வலைதளங்களில் குற்றக் காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து பரவலான...

யாழ்- தீவுகளுக்கான படகு பயண நேர மாற்றம்

யாழ்ப்பாணம் எழுவைதீவு மற்றும் அனலைதீவு பகுதிகளுக்கான பயணிகள் படகு சேவைகளில் நாளை...

3வது மனைவியின் கொடுமை தாங்க முடியவில்லை… என்னை கருணைக்கொலை செய்யுங்கள்: கதறும் கணவன்!

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் கிரீட் படேல். இவர் தன்னை தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்