யாழில் நடந்த ஏட்டிக்குப்போட்டி வாள்வெட்டு: ஆவா ரௌடிக்குழு சந்தேகநபர் கைது!

Date:

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்குழு ரௌடி என்ற சந்தேகத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்ட இரண்டு இடங்களில் கடந்த 14ஆம் திகதி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆவா குழு, தனுரொக் குழு ரௌடிகள் ஏட்டிக்கு போட்டியாக இந்த வாள்வெட்டில் ஈடுபட்டதாக அறியப்படுகிறது.

இரண்டாவது வாள்வெட்டில் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மானிப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கிளிநொச்சியை சேர்ந்த 28 வயதான இளைஞனே கைதானார். அவர் ஆவா ரௌடிக்குழு உறுப்பினர் என நம்பப்படுகிறது.

அவர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி ஜெயானந்தமூர்த்தி காலமானார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இன்று (21)...

செம்மணி புதைகுழி விவகாரம்: உண்மையை வெளிக்கொணர சர்வதேச விசாரணை அவசியம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான உண்மைகளை முழுமையாக வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு...

உயரம் தாண்டுதலில் இலங்கையின் தேசிய சாதனை புதுப்பிப்பு!

இலங்கையின் முன்னணி தடகள வீரரான தரிந்து தசுன், 2026 மலேசியா திறந்தநிலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்