26 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

வீட்டிலிருந்து வெளியேறி யாழ் வந்த 17 வயது சிறுமிகளுடன் தகாத உறவு: 5 பேர் கைது!

வீட்டைவிட்டு வெளியேறி யாழ்ப்பாணம் வந்த முல்லைத்தீவு சிறுமிகள் இருவருடன் தகாத நடத்தையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களின்‌ கீழ்‌ பேருந்து சாரதிகள்‌ இருவர்‌, நடத்துநர்கள்‌ இருவர்‌ உள்பட ஐவரை விளக்கமறியலில்‌ வைக்க யாழ்ப்பாணம்‌ நீீதிவான்‌ நீதிமன்றம்‌
இன்று (17) உத்தரவிட்டது.

வீட்டைவிட்டு வெளியேறி துர்நடத்தையில்‌ ஈடுபட்ட சிறுமிகளும்‌ விளக்கமறியலில்‌ வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்ற நிலையில்‌ சிறுமிகள்‌ இருவரும்‌ குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரும்‌ யாழ்ப்பாணம்‌ நீதிவான்‌ நீதிமன்றில்‌ இன்று
முற்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவுகள்‌ வழங்கப்பட்டன.

புதுக்குடியிருப்பைச்‌ சேர்ந்த 17 வயதுச்‌ சிறுமிகள்‌ இருவர்‌ இரண்டு வாரங்களுக்கு முன்னர்‌ வீட்டிலிருந்து வெளியேறி வந்து யாழ்ப்பாணம்‌ பேருந்து நிலையத்தில்‌
இருந்துள்ளனர்‌.

அவர்கள்‌ தொடர்பில்‌ அறிந்த ஆண்‌ ஒருவர்‌, சிறுமிகள்‌ இருவரையும்‌ அழைத்துச்‌
சென்று சாவகச்சேரியில்‌ உள்ள விடுதி ஒன்றில்‌ தங்‌கியிருந்துள்ளார்‌.

எனினும்‌ நேற்று முன்‌இனம்‌ அந்த விடுதியிலிருந்து வெளியேறிய மூவரும்‌
யாழ்ப்பாணம்‌ பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளனர்‌.

அன்று இரவு வாகனம்‌ ஒன்றில்‌ பேருந்து சாரதிகள்‌ இருவர்‌, நடத்துநர்கள்‌ இருவர்‌ என மேலும்‌ நால்வர்‌ இணைந்து வாகனம்‌ ஒன்றில்‌ எழுதுமட்டுவாழ்‌ பற்றைக்‌
காட்டுக்குள்‌ சிறுமிகளை அழைத்துச்‌ சென்றுள்ளனர்‌.

அதன்போது சிறுமி ஒருவர்‌ சாதூரியமாகப்‌ பேசி வாகனத்திலிருந்து இறங்கி எழுதுமட்டுவாழில்‌ மக்கள்‌ வாழும்‌ பகுதிக்கு வந்துள்ளார்‌.

தப்பிவந்த சிறுமி வீதியில்‌ சென்றவர்களிடம்‌ நடந்தவற்றை தெரிவித்த நிலையில்‌
பொலிஸ்‌ அவசர பிரிவுக்கு அறிவிக்கபட்டது.

மற்றைய சிறுமியுடன்‌ சென்ற ஐவரும்‌ மறுநாள்‌ யாழ்ப்பாணம்‌ நகருக்கு அழைத்து
வந்து சிறுமியை இறக்கிவிட்டுச்‌ சென்றுள்ளனர்‌.

சம்பவம்‌ தொடர்பில்‌ யாழ்ப்பாணம்‌ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சிறுமிகளிடம்‌ முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்‌ அடிப்படையில்‌ அவர்களை
கடத்தச்‌ சென்றமை மற்றும்‌ தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின்‌
கீழ்‌ ஐவர்‌ கைது செய்யப்பட்டனர்‌.

வீட்டைவிட்டு வெளியேறி துர்நடத்தையில்‌ ஈடுபட்ட சிறுமிகளும்‌ விளக்கமறியலில்‌ வைக்கப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பணிப்பகிஷ்கரிப்பில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்

east tamil

ஊடகவியலாளர் மீது குற்றச்சாட்டு

east tamil

குடத்தனையில் பொலிஸ், இராணுவம், அதிரடிப்படை இணைந்து அதிரடி சோதனை

east tamil

முல்லைத்தீவில் தூக்கிலிடப்பட்ட நாய்: செல்லமாக வளர்த்த பெண் சொல்லும் கதை; கொடூர பெண்ணுக்கு விளக்கமறியல்!

Pagetamil

யாழ் பல்கலையில் இரவில் பெண்களின் உள்ளாடைகள் காணப்படும் சம்பவம் உண்மையா?: மற்றொரு விளக்கம்!

Pagetamil

Leave a Comment