அம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 18,800 லீற்றர் டீசலுடன் நால்வர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
விசேட அதிரடிப்படையின் ஹம்பாந்தோட்டை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மீன் பாரவூர்தி மற்றும் மற்றுமொரு பாரவூர்தி மூலம் இந்த டீசல் கொண்டு செல்லப்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த டீசல் அம்பாறை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட டீசலின் மதிப்பு சுமார் 80 லட்சம் ரூபாய்.



