தாய்லாந்து செல்கிறார் கோட்டாபய!

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை (11) தாய்லாந்துக்கு பயணமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு தற்காலிகமாக சிறிது நாள் தங்கியிருப்பார்.

இலங்கையில் அவரது தவறான நிர்வாகத்தால் கோபமடைந்த மக்களின் எதிர்ப்பிற்கு அஞ்சி, கோட்டாபய ஜூலை 14 அன்று மாலைதீவு வழியாக சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார்.

சிங்கப்பூரிற்கு சென்ற பின்னர் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தார். பதவிக்காலத்தை நிறைவு செய்யாமல் நாட்டை விட்டு விரட்டப்பட்டவர், பதவியை பூர்த்தி செய்யாமல் இடை விலகியவர் என்ற எதிர்மறை பதிவுகளிற்கும் சொந்தக்காரர் ஆனார்.

கோட்டாபய சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு நாளை பாங்கொக் செல்வார் என எதிர்பார்க்கப்படுவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், ரொய்ட்டர்ஸின் கேள்விகளிற்கு தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சகம் பதிலளிக்கவில்லை.

சிங்கப்பூர் அரசாங்கம் இந்த மாத தொடக்கத்தில் அவருக்கு எந்த சலுகைகளையும் விலக்குகளையும் வழங்கவில்லை என்று கூறியது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜூலை மாதம் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு வழங்கிய நேர்காணலின் போது, “அவர் திரும்பி வருவதற்கான நேரம் இது என்று நான் நம்பவில்லை. அவர் விரைவில் திரும்பி வருவதற்கான எந்த அறிகுறியும் என்னிடம் இல்லை” என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...

போதைப்பொருளுடன் சிக்கிய மீன்பிடி படகு

தெற்கு கடலில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது, ​​பெருமளவு போதைப்பொருட்களை...

ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் நாசமாகிறது: ட்ரம்பை மறைமுகமாக சாடிய போப்!

போர்களுக்காக பில்லியன் கணக்கில் செலவழிக்கும் தலைவர்களை போப் கடுமையாகச் சாடியதோடு, "ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்