காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கும் இரண்டாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தன்னை தனிமைப்படுத்துகொண்டுள்ளதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட சில நாட்களில் அவரது மகள் பிரியங்கா காந்திக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் அப்பொது அவரை தனிமைப்படுத்துகொண்டார். மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் “ மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். கொரோனா வழிமுறைகளை பின்பற்றி வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்துகொண்டுள்ளேன்’ என்று அவர் ட்வீட் செய்துள்ளார்..
Tested positive for covid (again!) today. Will be isolating at home and following all protocols.
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) August 10, 2022




